• Login
Sunday, May 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சம்பளம் ஒரே வாரத்தில் கரைந்துவிடுகிறதா? இந்த சின்ன விஷயம் கூட காரணமா இருக்கலாம்… கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
May 31, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சம்பளம் ஒரே வாரத்தில் கரைந்துவிடுகிறதா? இந்த சின்ன விஷயம் கூட காரணமா இருக்கலாம்… கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 31, 2026 1:33 PM IST

சம்பளம் வந்த சில நாட்களுக்குள் பணம் முழுவதுமாக செலவாகி விடுகிறது. சிலரோ சம்பளம் வந்து 4 அல்லது 5 ஆம் நாள்களிலேயே மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். “நாம் சம்பாதித்த பணம் எல்லாம் எங்கே போகிறது?” என்ற கேள்வி அனைவரிடமும் வருகிறது.

News18
News18

நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் மாதாந்திர சம்பளத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அந்தப் பணத்தில்தான் வீட்டுச் செலவுகள், கடன், தவணை, சேமிப்பு என அனைத்துமே இருக்க வேண்டும். ஆனால் இப்போது சம்பளம் வந்த சில நாட்களுக்குள் பணம் முழுவதுமாக செலவாகி விடுகிறது. சிலரோ சம்பளம் வந்து 4 அல்லது 5 ஆம் நாள்களிலேயே மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். “நாம் சம்பாதித்த பணம் எல்லாம் எங்கே போகிறது?” என்ற கேள்வி அனைவரிடமும் வருகிறது.

இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை சந்தித்த ஹர்ஷித் ஷர்மா என்ற இளைஞர் ரெட்டிட்டில் ஒரு பதிவு போட்டார். “ஒவ்வொரு மாதமும் என் சம்பளம் எங்கே போகிறது என்பது எனக்கே புரியவில்லை. நான் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கவில்லை, ஆடம்பர வாழ்க்கையும் இல்லை. ஆனாலும் என் பணம் காணாமல் போய்க்கொண்டே இருக்கிறது,” என்று அவர் எழுதிய அந்த பதிவு இணையத்தில் வைரலாகியது. இது பல இளம் ஊழியர்களின் நிலையைச் சரியாகக் காட்டுகிறது. இதன் மூலம் ‘கண்ணுக்குத் தெரியாத செலவுகள்’ பற்றியும் பேசத் தொடங்கினர்.

ஹர்ஷித் தனது வங்கி கணக்கு அறிக்கையை கவனமாகப் பார்த்தப்போதுதான் உண்மை தெரிந்தது. அவன் சம்பளத்தை குறைத்து விடுவது ஒரு பெரிய செலவு அல்ல; பல சிறிய மாதாந்திர சந்தாக்கள்தான். ஒவ்வொரு செயலிக்கும் “வெறும் ரூ.99”, “வெறும் ரூ.149”, “மாணவர் சலுகை” என்று சிறிய தொகை மாத முடிவில் ஒரு பெரிய தொகையாக சேர்ந்து போயிருந்தது. அதிலும், அவன் பணம் செலுத்தும் பல செயலிகளை மாதத்தில் ஒருமுறையாவது திறந்து பார்க்கவும் இல்லை என்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது ஹர்ஷித்தின் பிரச்சனை மட்டும் இல்லை. டெல்லியில் இருக்கும் அங்கிதா ஜெயஸ்வாலும் இதே பிரச்சனையை சந்தித்துள்ளார். அவர் கூறுகையில் “நான் சினிமா ரசிகை. எந்த புதிய படம், இணையத் தொடரையும் தவற விடக்கூடாது என்று நினைத்து, எல்லா ஓடிடி தளங்களுக்கும் சந்தா எடுத்திருந்தேன். ஆனால் நாள் முழுக்க வேலை செய்து களைப்பாக இருப்பதால், அவற்றைப் பார்க்க நேரமோ ஆர்வமோ இல்லாமலே இருந்தது. ஆனாலும் ஒவ்வொரு மாதமும் பணம் தானாகக் கட்டணம் பிடிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. எவ்வளவு பணம் வீணாகிறது என்று உணர்ந்த பிறகு, பெரும்பாலான சந்தாக்களை ரத்து செய்துவிட்டேன். இப்போது ஒரு நேரத்தில் ஒரு ஓடிடிக்குமே மட்டுமே சந்தா எடுக்கிறேன். முடிந்ததும் அதை நிறுத்தி, அடுத்ததுக்கு மாற்றுகிறேன்,” என்று அவர் கூறினார்.

நாம் நினைவில் கூட இல்லாத சிறுசிறு தேவைகளுக்காக தானாகக் கட்டணம் பிடிக்கும் முறையை வைத்திருக்கும் பழக்கம்தான் இப்படி பணம் இல்லாமல் போவதற்குக் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதை ‘சிறுசிறு செலவால் வரும் சோர்வு’ என அழைக்கிறார்கள். வசதிக்காக உருவாக்கப்பட்ட இந்த தளங்கள், இளைஞர்களுக்கு நிதி மேலாண்மையில் புதிய சிக்கல்களை உருவாக்குகின்றன. அதனால் நிதி பற்றிய விழிப்புணர்வும் ஒழுக்கமும் இப்போது மிகவும் அவசியம் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நிறுவனங்கள் நுகர்வோரை தங்கள் தயாரிப்புகளுக்கு அடிமையாக்க பல உத்திகளைப் பயன்படுத்துகின்றன. இலவச சோதனை தருகிறோம் எனக் கூறி, முதலில் கார்டு விவரங்கள் கேட்கிறார்கள். பின்னர் பலர் அதை ரத்து செய்யாமல் விடுகிறார்கள். தானாகக் கட்டணம் பிடிக்கும் முறை இருப்பதால் காசு செல்வது கூட நமக்குத் தெரியாமல் போகிறது. இப்படி சிறுசிறு செலவுகள் நம் சேமிப்பையும் நிதி ஒழுக்கத்தையும் மெதுவாக கிழித்து விடுகின்றன.

இப்போது பல இளைஞர்கள் இந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, ஒவ்வொரு மாதமும் வங்கி அறிக்கையை சரிபார்த்து கொள்கிறார்கள். பயன்படுத்தாத சேவைகளை உடனே ரத்து செய்கிறார்கள். இப்படிப்பட்ட அனுபவங்களால், பலருக்கும் பணத்தை எப்படி திட்டமிட்டு பயன்படுத்துவது, எப்படி சேமிப்பது என்ற நிதி மேலாண்மைத் திறன்கள் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உருவாகி வருகிறது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

சம்பளம் ஒரே வாரத்தில் கரைந்துவிடுகிறதா? இந்த சின்ன விஷயம் கூட காரணமா இருக்கலாம்… கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Read More

Previous Post

'மாஸ்' பவுலர்களையே மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி… ஆனால் அந்த ஒருத்தரிடம் சரண்டர்..! – யார் அவர்? | Vaibhav Sooryavanshi

Next Post

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் அனைத்துலக வேத ஜோதிடக் கருத்தரங்கு | Makkal Osai

Next Post
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் அனைத்துலக வேத ஜோதிடக் கருத்தரங்கு | Makkal Osai

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் அனைத்துலக வேத ஜோதிடக் கருத்தரங்கு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin