அனைத்து பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி வழங்கிய நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மொஹ்சின் கான் மட்டுமே சூர்யவன்ஷிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். இந்த சீசனில் சூர்யவன்ஷிக்கு எதிராக ஒரு ‘மெய்டன் ஓவர்’ வீசியதோடு, அந்த ஓவரின் கடைசி பந்தில் அவரை அவுட்டும் செய்தார். சூர்யவன்ஷிக்கு எதிராக 12 பந்துகள் வீசி, வெறும் 2 ரன்கள் மட்டுமே தந்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, 16 ஸ்டிரைக் ரேட்டில் அவரை கட்டுப்படுத்திய ஒரே பந்துவீச்சாளர் மொஹ்சின் கான் தான். இவரைத் தவிர தீபக் சாஹர், வருண் சக்கரவர்த்தி, மாதவ் திவாரி ஆகியோர் மிகக் குறைந்த பந்துகளிலேயே சூர்யவன்ஷி விக்கெட்டை வீழ்த்தி தப்பினர்.


