Last Updated:
மத்திய அரசு, நரேந்திர மோடி 12 ஆண்டு ஆட்சியில் வரி சலுகை, ஜிஎஸ்டி, வீட்டு கடன் வட்டி குறைப்பு, வீடுகள், ஐஐடி வளர்ச்சி மூலம் நடுத்தர வர்க்கம் உயர்ந்தது என கூறியது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 12 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் முதல் 13 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கும் குடும்பங்களை நடுத்தரக் குடும்பங்கள் என்று உலக வங்கி வகைப்படுத்தியுள்ள நிலையில், பாஜக தலைமையிலான 12 ஆண்டு கால ஆட்சியில் நடுத்தர குடும்பத்தினரை மேம்படுத்தும் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.
குறிப்பாக புதிய வருமானவரி முறையில் 12 லட்சத்து 75 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறுவோருக்கு வருமான வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி முறை அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்து, நடுத்தர மக்களின் அன்றாட செலவுகளைக் குறைத்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் 9.5% முதல் 10.5% ஆக இருந்த வீட்டுக் கடன் வட்டி விகிதம், 2026-இல் 7.35% – 8.75% ஆகக் குறைந்துள்ளது. 2015 முதல் 2026 வரை ஒரு கோடியே 18 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
2013-14 ஆம் ஆண்டில் 4.2% ஆக இருந்த மின்சார பற்றாக்குறை 2025-26 இல் 0.03% ஆக சரிந்துள்ளது. 2014 இல் 16 ஆக இருந்த ஐஐடிகளின் எண்ணிக்கை 2025 இல் 23 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று விவசாயத்துறை மற்றும் பெண்கள் நலவாழ்வுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கையை வலுப்படுத்தி, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
வரி முதல் வட்டி குறைப்பு வரை.. “நடுத்தர வர்க்கத்தை உயர்த்திய 12 ஆண்டுகால சீர்திருத்தங்கள்” – மத்திய அரசு பெருமிதம்!


