காலி – தங்கெதர பகுதியில் கடந்த 12ஆம் திகதி நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பண்டாரகம பொலிஸ் பிரிவின் மில்லகஹ சந்தியில் வைத்து, குறித்த நபர் 3 கிராம் 810 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று (29) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
கடந்த 12 ஆம் திகதி காலை 7:30 மணியளவில் கார் ஒன்றில் வந்த துப்பாக்கிதாரி, நபர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. R

