லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகையில் சிக்கித்தவித்த நான்கு பேர் அபாயகரமான மீட்புப் பணியின் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, மீட்பாளர்கள் சேற்று நீர் மற்றும் கூர்மையான பாறைகள் வழியாகக் குகையின் ஆழத்திற்குள் சென்று பணியை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
மீட்புக் குழுக்கள்
குகையிலிருந்து தண்ணீரை வெளியேற்றியும், இடிந்து விழும் அபாயங்களைக் கடந்து சென்றும் மீட்புக் குழுக்கள் போராட வேண்டியிருந்த ஒரு அபாயகரமான மீட்புப் பணியில் என இந்த நடவடிக்கை விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய ஏழு பேர் கொண்ட குழுவில் முதல் நபர் நேற்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மீட்கப்பட்ட நான்கு பேரும், குகை நுழைவாயிலிலிருந்து சுமார் 300 மீட்டர் (980 அடி) தொலைவில் உள்ள பகுதியின், பாறை விளிம்பில் ஒருவரையொருவர் நெருக்கமாக அணைத்துக்கொண்டு பதுங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
தங்கத் தாது போன்ற மதிப்புமிக்க கனிமங்களைத் தேடுவதற்காக அந்த ஆண்கள் கடந்த வாரம் குகைக்குள் நுழைந்ததாகவும், ஆனால் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டதாகவும் கருதப்படுகிறது.
குறித்த வெள்ளத்தால் மணலும் சரளைக்கற்களும் அடித்துவரப்பட்ட நிலையில் அவை , முக்கியமான வெளியேறும் வழியைத் தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

