இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 2025-26ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையின்படி, 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. மார்ச் 31, 2026 நிலவரப்படி, 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 7,05,482 லட்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு 6,34,458 லட்சமாக இருந்ததை விட தற்போது 11.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதை குறிக்கிறது. மதிப்பின் அடிப்படையில், அவை 35.27 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளன. இது முந்தைய ஆண்டு 31.72 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததை விட அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை கூறியதாக CNBC TV18 செய்தி வெளியிட்டுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, இந்தியப் பொருளாதாரத்தில் 500 ரூபாய் நோட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் வளர்ச்சி இருந்தபோதிலும், பணத்தின் முக்கியத்துவம் குறையவில்லை என்பதை இது காட்டுகிறது.


