தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றானது கபடி போட்டி. இந்த விளையாட்டு கிராமப்புறங்களில் தொடங்கி நகர்ப்புறத்திற்கும் சென்றுள்ளது. அதுபோல கம்ப்யூட்டர், செல்போன் என்று எந்திரங்களில் மூழ்கி கிடக்கும் இளைஞர்களாகிய மாணவர்கள் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் சோர்வடைந்து வருகிறார்கள். சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்.
அந்தவகையில் உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் சேர்ப்பது விளையாட்டு. அதுவும் கபடி விளையாட்டு என்பது உடல் வலிமையும் மன வலிமையும் இரண்டும் ஒன்றிணைந்து விளையாடுவதாகும். கபடி விளையாட்டுக்கு என பல சிறப்பு பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, விழுப்புரம் மாவட்ட பிரிவில் இயங்கி வரும் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதியில்,மாநில அளவிலான கபடி போட்டிக்கு பிரத்தியேக கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பு பயிற்சி முகாம் 07.05.2024 முதல் 21.05.2024 வரை நடைபெறும். இந்த சிறப்பு கபடி பயிற்சி முகாமிற்கு இராமநாதபுரம்,தேனி, திண்டுக்கல், விழுப்புரம் போன்ற பல மாவட்டங்களில் இருந்து ஆர்வம் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வளர்த்து வருகின்றனர்.
மாணவர்களுக்கென சிறப்பு பயிற்சியாளராக இந்திய கபடி விளையாட்டு வீரர், தயான் சந்த் (வாழ்நாள் சாதனையாளர் விருது) பெற்ற கவிதா செல்வராஜ் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்த கோடைகால சிறப்பு பயிற்சி முகாமில் 30 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாணவர்கள் காலை 6.30 மணி முதல் 8:30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையும் பயிற்சி எடுத்து வருகின்றனர். மாணவர்களுக்கு என குடிநீர் வசதி, கழிவறை வசதி, தங்கும் வசதி, உணவு வசதி என அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளது.
இந்த கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் பற்றி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் கூறுகையில், “வருகின்ற காலத்தில் நிச்சயமாக சர்வதேச அளவிலான கபடி போட்டியில், நான் தயார் செய்யும் என்னுடைய மாணவர்கள் நிச்சயமாக விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார்கள்.அந்த அளவிற்கு மாணவர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்து வருகிறோம். இதற்காக தமிழக அரசாங்கம் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தந்துள்ளது” என்றார்.
இந்த கபடி பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறுகையில், “எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. நாங்கள் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கபடி போட்டி பிரிவில் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்போம்.
அது மட்டுமல்லாமல் கபடி போட்டி விளையாடுவதற்கு அதிக உடல் வலிமை தேவைப்படுகிறது. இங்க அளிக்கும் உணவு போதுமானதாக இருந்தாலும், இன்னும் கூடுதலாக டயட் உணவு தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” எனத் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)