வேலையற்ற பிரித்தானியர்களின் வேலைகளைப் பறித்த இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் உள்வருகையை தடக்க வேண்டும் என அந்நாட்டில் உள்ள ஒரு தீவிர வலதுசாரிக் கட்சியின் தலைவர் ரூபர்ட் லோவ் கூறியுள்ளார்.
மேக்கர்ஃபீல்டில் நடைபெறவிருக்கும் முக்கியமான இடைத்தேர்தலுக்கு முன்னதாக, சமீப வாரங்களில் அவரது இணையக் கருத்துக்கள் வைரலாகப் பரவி வருகின்றன நிலையில் குறித்த கருத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த கருத்துக்கு ஆதரவு வழங்கும் விதமாக எலான் மஸ்க் தனது X தளத்தில் அவற்றை மீண்டும் பதிவிட்டுள்ளார்.
I don’t believe we should import millions of Pakistanis and Indians to do jobs that unemployed Brits should be doing.
If that makes me a racist, then so be it.
— Rupert Lowe MP (@RupertLowe10) May 28, 2026
பிரித்தானியாவில் வசிக்கும் வெளிநாட்டினர்
“வேலையில்லாத பிரித்தானியர்கள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்வதற்காக, இலட்சக்கணக்கான பாகிஸ்தானியர்களையும் இந்தியர்களையும் நாம் இறக்குமதி செய்ய வேண்டும் என்று நான் நம்பவில்லை.

அது என்னை ஒரு இனவாதியாக்குமானால், அப்படியே ஆகட்டும்,” என்று லோவ் ஒரு பதிவில் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் ஆங்கிலம் பேச வேண்டும் என்றும், தாங்கள் பெறுவதை விட அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது இனவெறி அல்ல. ஒருவேளை நீங்கள் அதை இனவெறி என்று நினைத்தாலும், நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை,” என்று அவர் இந்த வாரத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.
“புர்கா அணிந்த இரண்டு, மூன்று, நான்கு பெண்களுடன் ஆண்கள் சுற்றித் திரிவது – இது இயல்பானதல்ல.
நான் இதை வெறுக்கிறேன். மான்செஸ்டரின் வெவ்வேறு புறநகர்ப் பகுதிகளில் உள்ள சில முக்கிய வீதிகளா?
அது தற்போது இஸ்லாமியமானது.
கையகப்படுத்தல்
பிரித்தானிய குடும்பங்களால் நடத்தப்படும் வணிகங்கள் விரட்டியடிக்கப்பட்டு, இது ஒரு கையகப்படுத்தலாகும். காலனித்துவம்,” என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஜூன் 18 அன்று நடைபெறவிருக்கும் மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் மீது அனைவரின் கவனமும் குவிந்துள்ளது.
இந்தத் தேர்தல், கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் காமன்ஸ் அவையில் ஓர் இடத்தைப் பெறுவதற்கும், ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைமைக்குத் தலைமை தாங்கும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு சவால் விடுப்பதற்கும் உள்ள முயற்சியைத் தீர்மானிக்கும் விதமாக தீவிர வலதுசாரிக் கட்சிகளின் மோதல், இருக்கும் என கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
