பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் பகுதியில் உள்ள கட்டுமான தளம் ஒன்றில் இன்று மாலை கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கி இந்தோனேசிய தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு ஜாலான் குவார் பெராகு இண்டா பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து மாலை 4 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, பொதுமக்கள் அந்த 27 வயது தொழிலாளியை கான்கிரீட் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து மீட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
-fmt
