ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், இறுதியிலும் சட்டமன்றத்தில் தேசிய பாடலான வந்தேமாதரம் இசைக்கப்பட்டது. ஆனால், இதில் புது சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக புதிய அரசு பதவி ஏற்பின்போது, வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்ட நிலையில், இன்று சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், இறுதியிலும் வந்தே மாதரம் பாடல் பாடப்படாமல், இசைக்கப்பட்டுள்ளது. மேலும், முழு பாடலும் இசைக்கப்படாமல் முதல் பத்தி மட்டுமே இசைக்கப்பட்டுள்ளது.


