Last Updated:
உயர்நிலை அளவில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கும் போது எப்படி இவ்வளவு பெரிய தவறு நடந்தது என்று நீதிபதி ஜே.நரசிம்மா கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வு விவகாரத்தை பிரதமரே நேரடியாக கண்காணித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடந்தது. அப்போது, உயர்நிலை அளவில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கும்போது எப்படி இவ்வளவு பெரிய தவறு நடந்தது என்று நீதிபதி ஜே.நரசிம்மா கேள்வி எழுப்பினார்.
மேலும், இதுபோன்ற தவறுகள் நடக்கிறது என்றால், அசல் பரிந்துரைகளிலேயே தவறு இருக்க வேண்டும் அல்லது வழிமுறைகளைப் பின்பற்றுவதில் குளறுபடி ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார். அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,
இந்த விவகாரத்தை மத்திய அரசு உயர்மட்ட அளவில் கொண்டு சென்றுள்ளதாகவும், பிரதமர் நேரடியாக கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
மேலும் இளைஞர்கள் தொடர்பான விவகாரம் என்பதால் இதனை மிக தீவிரமான ஒன்றாக மத்திய அரசு கருதுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். புதிய செயல்முறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதனை வெளிப்படையாக கூறினால் அதன் குறிக்கோள் வீணாகிவிடும் என்றும் துஷார் மேத்தா தெரிவித்தார்.
Delhi,Delhi,Delhi
நீட் தேர்வு விவகாரம்: “பிரதமரே நேரடியாக கண்காணித்து வருகிறார்..” உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!


