இந்த மோட்டார் சைக்கிள் ஸ்டீல் டியூபுலர் ஸ்பைன் ஃபிரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 43 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் உள்ளது. இது 120 மிமீ வீல் டிராவலை வழங்குகிறது. பின்பக்கத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. இது 90 மிமீ டிராவலை வழங்குகிறது. முன் சக்கரம் 19 அங்குலமாகவும், பின் சக்கரம் 18 அங்குலமாகவும் உள்ளது. இது புல்லட்டின் பாரம்பரிய தோற்றத்தைத் தொடர்கிறது. பிரேக்கிங் அமைப்பில், முன்புறம் 320 மிமீ டிஸ்க்கும், பின்புறம் 300 மிமீ டிஸ்க்கும் உள்ளன. இரட்டை பிஸ்டன் காலிப்பர்கள், டூயல் சேனல் ஏபிஎஸ் அமைப்பு ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. வடிவமைப்பைப் பொறுத்தவரை, புல்லட் 650 முற்றிலும் கிளாசிக் தோற்றத்தைத் தொடர்கிறது. கையால் வரையப்பட்ட தங்க நிற மெல்லிய கோடுகள், கண்ணீர்த்துளி வடிவ எரிபொருள் தொட்டி, நிமிர்ந்த நிலையில் ஓட்டும் நிலை ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகும்.


