தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை சார்ந்த தொழில்களில் தேனீ வளர்ப்பு முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய இந்த தொழில், தற்போது நல்ல வருமானம் தரும் துணைத் தொழிலாக பலரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக உடன்குடி, சாயர்புரம், குரும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை மரங்கள் அதிகமாக காணப்படுவதால், தரமான முருங்கைத் தேன் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


