Last Updated:
America-Iran | புதிய ஒப்பந்தத்தின்படி ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அதன் யுரேனியம் இருப்பு குறித்து அடுத்த 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்த வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிகப் போர் நிறுத்தத்தை நீட்டிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு தற்காலிக உடன்படிக்கையை உருவாக்கி உள்ளதாகவும், அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் தற்காலிகப் போர் நிறுத்தம், மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கான தடைகளை நீக்கி அங்குள்ள கடல் கண்ணிவெடிகளை 30 நாட்களுக்குள் அகற்ற ஈரானும், அதற்கு பதில் நடவடிக்கையாக தனது கடல் வழி முற்றுகையை தளர்த்த அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய ஒப்பந்தத்தின்படி ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அதன் யுரேனியம் இருப்பு குறித்து அடுத்த 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்த வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த வரைவு இறுதி செய்யப்பட்டிருந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இது குறித்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
May 29, 2026 10:19 AM IST
தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க உடன்பாடு? அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல்! | America-Iran


