Last Updated:
இந்தியாவில் கடந்த ஆண்டு விற்பனையான இருசக்கர வாகனங்களில் 6 சதவீதம், அதாவது 13 லட்சத்திற்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
உலக அளவில் கடந்த ஆண்டு விற்பனையான கார்களில் நான்கில் ஒன்று எலெக்ட்ரிக் கார் என்பது தெரியவந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு, மேம்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு முன் எப்போது இல்லாத வகையில் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு உலகளவில் 2 கோடிக்கும் அதிகமான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையானதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, நார்வேயில் விற்பனையான கார்களில் 97 சதவீதம் எலெக்ட்ரிக் கார்களையே மக்கள் விரும்பி வாங்கியுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக டென்மார்க்கில் 71 சதவீதமும், சீனாவில் 53 சதவீதமும், அமெரிக்காவில் 10 சதவீத எலெக்ட்ரிக் கார்களும் விற்பனையாகியுள்ளன. அதேநேரம், இந்தியாவில் விற்பனையான கார்களில் 4 சதவீதம் மட்டுமே எலெக்ட்ரிக் கார்கள் என தரவுகள் காட்டுகின்றன. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனையை பொறுத்தமட்டில், உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு விற்பனையான இருசக்கர வாகனங்களில் 6 சதவீதம், அதாவது 13 லட்சத்திற்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.


