• Login
Saturday, May 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கணவரின் ஆணுறுப்பை அரிவாளால் கொத்தி தூக்கிய மனைவி

GenevaTimes by GenevaTimes
May 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கணவரின் ஆணுறுப்பை அரிவாளால் கொத்தி தூக்கிய மனைவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



குடும்பத் தகராறு உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், கணவரின் கள்ளத்தொடர்பைச் சந்தேகித்த மனைவி, நள்ளிரவில் அவரது ஆணுறுப்பை அரிவாளால் வெட்டிய துயரச் சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் பகுதியில் வசிக்கும் ராஜேஷ் கவுஷிக் என்பவர் ஒரு கட்டிடத் தொழிலாளி. இவருக்கும் இவருடைய மனைவி திரௌபதி பாய்க்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு நீடித்து வந்துள்ளது. ராஜேஷுக்கு வேறொரு பெண்ணுடன் தவறான தொடர்பு இருப்பதாக அவரது மனைவி திரௌபதி பலத்த சந்தேகம் கொண்டுள்ளார். இதனால் தம்பதியருக்குள் அடிக்கடி வாக்குவாதங்களும் சண்டைகளும் ஏற்பட்டு வந்துள்ளதாக அண்டை வீட்டாரும் போலீசாரும் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் நடந்தன்று இரவும் இருவருக்கும் இடையே வழக்கம் போலத் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் ஒன்றாக இரவு உணவை உட்கொண்டுவிட்டுத் தூங்கச் சென்றுள்ளனர். கணவர் ராஜேஷ் ஆழ்ந்த நித்திரையில் இருந்த சமயம் பார்த்து, நள்ளிரவில் கடும் ஆத்திரத்தில் இருந்த திரௌபதி, வீட்டில் இருந்த கூர்மையான அரிவாளை எடுத்து வந்து கணவரின் ஆணுறுப்பைத் துண்டித்துள்ளார்.


கடும் வலியால் அலறியடித்துக் கொண்டு, இரத்த வெள்ளத்தில் ராஜேஷ் அறையை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். தந்தையின் மரண ஓலத்தைக் கேட்டு திடுக்கிட்டு விழித்த இவர்களின் சிறுவயது மகன், தந்தை இரத்தக் கறையுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளான்.


உறவினர்களின் உதவியோடு ராஜேஷ் உடனடியாக அருகில் உள்ள அவசரப் பிரிவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டதால் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதோடு, அவரது உடல்நிலை இன்னும் கவலைக்கிடமான நிலையிலேயே நீடிப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த சக்கர்பாத் பொலிஸார், கணவரைக் கொடூரமாகத் தாக்கிய மனைவி திரௌபதி பாயைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், “கணவனின் தவறான தொடர்புகள் மீது எனக்கு இருந்த கடும் கோபமும் சந்தேகமுமே என்னை இந்தச் செயலைச் செய்யத் தூண்டியது,” என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தற்போது இச்சம்பவம் தொடர்பாகச் சக்கர்பாத் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



Read More

Previous Post

குனூங் பத்து பூத்தேவில் காணாமல் போன மலையேறுபவரைத்  தேடும் பணி முக்கியமான கட்டத்தில் உள்ளது – Malaysiakini

Next Post

சென்னைக்கு குட் நியூஸ்: தமிழக எல்லைக்கு வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர் | Makkal Osai

Next Post
சென்னைக்கு குட் நியூஸ்: தமிழக எல்லைக்கு வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர் | Makkal Osai

சென்னைக்கு குட் நியூஸ்: தமிழக எல்லைக்கு வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin