• Login
Saturday, May 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து பதவி விலகினார் சித்தராமையா | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 28, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து பதவி விலகினார் சித்தராமையா | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 28, 2026 4:26 PM IST

சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் விரைவில் புதிய முதலமைச்சர் ஆட்சி அமைப்பார் எனவும் சித்தராமையா தெரிவித்தார்.

News18
News18

கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து சித்தராமையா விலகியுள்ளார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இல்லாததால், ஆளுநர் மாளிகையில் அவரது சிறப்புச் செயலாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சித்தராமையா வழங்கினார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த நிலையில், முதலமைச்சராக சித்தாரமையா பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சர் பதவியை சித்தராமையாவும், டி.கே. சிவக்குமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் சமமாக பிரித்துக் கொள்வது என ஒப்புக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.

இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டிகே சிவக்குமார் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க் கொடி தூக்கினர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் சித்தராமையா இன்று காலை விருந்து அளித்தார். அப்போது, சித்தராமையாவின் காலில் விழுந்து டி.கே.சிவக்குமார் ஆசி பெற்றார்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோருடன் ஆளுநர் மாளிகைக்கு விரைந்த சித்தராமையா, ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் சிறப்புச் செயலாளர் பிரபு சங்கரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, காங்கிரஸ் தலைமை கூறியதை அடுத்து ராஜினாமா கடிதத்தை வழங்கி இருப்பதாக தெரிவித்தார். ஆளுநர் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வார் என நம்புவதாகவும் அவர் கூறினார். சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் விரைவில் புதிய முதலமைச்சர் ஆட்சி அமைப்பார் எனவும் சித்தராமையா தெரிவித்தார்.

Read More

Previous Post

Tamilmirror Online || டிரம்ப் எருமை மாடு: குர்பானி இலிருந்து தப்பியது

Next Post

1MDB நிதியைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பு அமெரிக்க நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டது. – Malaysiakini

Next Post

1MDB நிதியைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பு அமெரிக்க நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin