Last Updated:
ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் – ஓமன் இணைந்து நிர்வகிக்கும் திட்டத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு.
ஹோர்முஸ் நீரிணையை கூட்டாக நிர்வகிப்பது தொடர்பாக ஈரானுடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் முன்னெடுத்தால் ஓமான் நாட்டை தகர்த்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது போரைத் தொடங்கியதில் இருந்து, உலக அளவில் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக ஈரான் முன்மொழிந்த ஒப்பந்தத்தை பரிசீலித்து வருவதாகவும், விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஹோர்முஸ் நீரிணை
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை ஓமனுடன் சேர்ந்து கூட்டாக நிர்வகிக்க இருப்பதாக ஈரான் முன்மொழிந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், சர்வதேச சட்டத்தின்படி ஹோர்முஸ் நீரிணையை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது குறித்த ஈரானின் முன்மொழிவை நிராகரிப்பதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.


