Last Updated:
கனமழை நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க உடனடி நிதியாக 250 கோடி ரூபாயை சீன அரசு விடுவித்துள்ளது.
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக ஹுபே (Hubei), ஹுனான் (Hunan), குவாங்சி (Guangxi), குய்ஷோ (Guizhou) உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக முக்கிய ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் கனமழைக்கு பாலம் உடைந்து கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அதன் காணொளி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளஹ்டு.
An eyewitness caught the moment a car on the edge of a broken bridge in east-central China fell into a fast-flowing river after the structure gave way. The vehicle had been evacuated before it fell. pic.twitter.com/QWD2CG3YFJ
— ABC News (@ABC) May 26, 2026
சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் பெய்த மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் காணாமல் போன 10க்கும் மேற்பட்டோரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தேங்கிய நீரில் வாகனங்கள் மூழ்கிய நிலையில், குடியிருப்புகளில் சிக்கித் தவிக்கும் மக்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கனமழை நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க உடனடி நிதியாக 250 கோடி ரூபாயை சீன அரசு விடுவித்துள்ளது. மாகாணத்தின் சில பகுதிகளில் குவிந்த மழையின் அளவு 250 மி.மீட்டரைத் தாண்டியதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இந்த கனமழையால் சீனாவே புரட்டிப்போடப்பட்டுள்ளது.


