நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவையின் 5வது நேரடி அமர்வு நெதர்லாந்து நாட்டின்
டென்ஹார்க் நகரில் மே மாதம் 18,19,20 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.
18ம் திகதி மதியம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க
உதவிப்பிரதமர் தலமையில் சட்டத்துறை ஆராய்ச்சி,மற்றும் மனித உரிமைகள்,அரசியல் செயற்பாட்டு இளையோரது கல்விசார் சந்திப்புகள்
நடைபெற்றன.
மேலும், 18ம் திகதி மாலை சர்வதேச மனித உரிமைகள் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் நெதர்லாந்து நாட்டின் டென்ஹாக் நகரில் அமைந்துள்ள Humanity Hub
மண்டபத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நடைபெற்றது.
இதில் சர்வதேச சட்ட வல்லுனர்
TOBY CADMAN இவ் நினைவுப் பேருரையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











