செல்போன் செயலியில் புதிய வாடிக்கையாளர்களை இணைக்க, பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு விதித்த தடையை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பல்வேறு மோசடிகள் அரங்கேறுவதால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோடக் மஹிந்திரா வங்கியின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பில் குறைபாடுகளை கண்டறிந்த ரிசர்வ் வங்கி, செல்போன் செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் தடைவிதித்து உத்தரவிட்டது.
அதற்கு முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டு, எச்டிஎஃப்சி வங்கியின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் குறைபாடுகள் இருந்ததால், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க தடைவிதித்தது. அந்த தடை கடந்த 2021ஆம் ஆண்டிலேயே நீக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் ‘பாப் வேர்ல்டு’ செல்போன் செயலியில், வாடிக்கையாளர்களை இணைப்பதில் சில குறைபாடுகள் இருந்ததால், புதிய வாடிக்கையாளர்களை இணைக்க கடந்த அக்டோபரில் ரிசர்வ் வங்கி தடைவிதித்தது.
மேலும் படிக்க:
ஒரே நேரத்தில் 300 ஊழியர்கள் விடுப்பு.. 79 விமானங்கள் ரத்து.. மீண்டும் சிக்கலில் ஏர் இந்தியா
இதையடுத்து, பேங்க் ஆஃப் பரோடா ‘பாப் வேர்ல்டு’ செயலியில் இருந்த குறைபாடுகளை களைந்தது. இதையடுத்து, 6 மாதங்களுக்கு பிறகு ‘பாப் வேர்ல்டு’ செயலியில் புதிய வாடிக்கையாளர்களை இணைக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இனி பேங்க் ஆஃப் பரோடா வங்கி, தங்களது செயலியில் புதிய வாடிக்கையாளர்களை இணைக்கலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
