Last Updated:
சூரியன் மறைந்தவுடன் யாத்ரீகர்கள் அனைவரும் முஜ்தலிஃபா நோக்கி புறப்பட்டனர்.
சவூதி அரேபியாவில் உள்ள கருணை மலை எனும் அரஃபா (ARAFAT) மைதானத்தில் ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் உருக்கமாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஹஜ் யாத்திரை என்பது இஸ்லாம் மதத்தின் ஐந்தாவது கடமையாக கருதப்படுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு, நபிகள் நாயகம், வரலாற்று சிறப்புமிக்க தனது இறுதி சொற்பொழிவை இந்த கருணை மலையில் ஆற்றியதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக, அரஃபா தினத்தை கொண்டாடும் விதமாக ஹஜ் யாத்திரை மேற்கொண்ட இஸ்லாமியர்கள், சூரிய உதயத்தின் போது இந்த மலையில் ஒன்று கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே மாதிரியான வெள்ளை ஆடை அணிந்து ஒன்று கூடினர். உலகெங்கிலும் இருந்து வரும் லட்சக்கணக்கான மக்கள், பாகுபாடின்றி அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில்தான் இதுபோல ஒரே மாதிரியான வெள்ளை ஆடையை அணிந்து யாத்திரையை அவர்கள் மேற்கொள்கின்றனர். சூரியன் மறைந்தவுடன் யாத்ரீகர்கள் அனைவரும் முஜ்தலிஃபா நோக்கி புறப்பட்டனர்.


