பீகாரில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக பள்ளி மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பீகார் மாநிலத்தில் ஜூன் 8 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே ரெட் அலர்ட் விடுத்திருந்தது.
இந்நிலையில் பீகார் மாநிலம், ஷேக்பூராவில் வெப்ப அலையின் தாக்கம் தாங்க முடியாமல் பள்ளி மாணவர்கள் இன்று பலர் பள்ளியிலேயே மயங்கி விழுந்தனர். உடனடியாக ஆசிரியர்கள் பலர் மாணவர்களுக்கு விசிறியால் வீசிவிட்டு அவர்களை வெப்பத்திலிருந்து ஆசுவாசப்படுத்தினர்.
#WATCH
| Bihar: Several students fainted due to heatwave conditions at a school in Sheikhpura. The students were later admitted to a hospital.
pic.twitter.com/Mv9Eg3taCJ
— ANI (@ANI)
May 29, 2024
பீகாரில் 47 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் வெப்பம் தொடர்பான நோய்களின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக பலர் வெப்ப பக்கவாதம் என்ற ஹீட் ஸ்ட்ரோக் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் ஜூன் 8 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க:
முல்லைப்பெரியாறு அணையில் வரும் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு!
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி பக்சர், ஔரங்காபாத், கயா, கைமூர் மற்றும் ரோஹ்தாஸ் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீதாமர்ஹி, மதுபானி, தர்பங்கா, பாபுவா, ரோஹ்தாஸ், அவுரங்காபாத் மற்றும் நவாடா ஆகிய இடங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
