Last Updated:
காங்கோவின் புகாவு நகரில் பொது இடங்களில் கை கழுவும் தற்காலிக அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
காங்கோவில் எபோலா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உயிரிழந்தவர்களின் உடல்களும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் பாதுகாப்பான இடத்தில் அடக்கம் செய்யப்படுகின்றன.
ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, உகாண்டாவில் சுமார் ஆயிரம் பேர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது பரவி வரும் அரிதான Bundibugyo வகை எபோலாவிற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இல்லாததால், நோய் மீதான அச்சம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மொங்க்வாலு பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தால், குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
எபோலா நோய்
இதனிடையே, காங்கோவின் புகாவு நகரில் பொது இடங்களில் கை கழுவும் தற்காலிக அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதனை தன்னார்வலர்கள் நிறுவி வருகின்றனர். கைகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியம் என்றாலும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தீவிரமடையும் எபோலா பரவல்… சந்தேகத்திற்கிடமாக இறப்போருக்கு இறுதிச்சடங்கு செய்ய காங்கோவில் தடை!


