Last Updated:
ஹாங்காங்கில் பாரம்பரிய பன் திருவிழா களைகட்டியுள்ளது.
ஹாங்காங் நாட்டின் சியுங் சாவ் (Cheung Chau) தீவில் புத்தர் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா திங்கட்கிழமை நள்ளிரவு கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் பன்களால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான கோபுரத்தில் நள்ளிரவு சரியாக 12 மணியளவில் 3 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி போட்டுக் கொண்டு ஏறி பன்களை பறித்தனர்.
Twelve competitors scrambled up a 46-foot tower of buns in the first minutes, marking the climax of Hong Kong’s annual Cheung Chau Bun Festival pic.twitter.com/ZeroBkUPCj
— Reuters (@Reuters) May 25, 2026
மூன்று நிமிடங்களுக்குள் அதிக எண்ணிக்கையிலான பன்களை பறித்தவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டனர். அதன்படி, தீயணைப்பு வீரர் குவோக் கா-மிங் ‘பன் ராஜா’ பட்டத்தை தட்டிச் சென்றார். பெண்கள் பிரிவில் பனிப்பிரதேசத்தில் மலையேற்றத்தில் ஈடுபடும் வீராங்கனை ஜேனட் குங் ’பன் ராணியாக’ அறிவிக்கப்பட்டார். இயற்கை பேரிடர்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக சியுங் சாவ் தீவு மக்கள் இந்த திருவிழாவை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங் | நள்ளிரவில் களைகட்டிய பன் திருவிழா… பரிசை தட்டிச்சென்ற பன் ராணி யார் தெரியுமா?

