• Login
Monday, May 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘RT6’ கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு!

GenevaTimes by GenevaTimes
May 25, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
‘RT6’ கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ‘Geng RT6’ என்ற பெயரில் சட்டவிரோத மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலாகச் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் 11 ஆண்கள் மீது இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புக்கிட் அமான் காவல்துறைத் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகளின் மிகப்பலத்த ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப் படையினரின் எஸ்கார்ட்டுடன் (Heavy Escort) இந்த 11 பேரும் நீதிமன்ற அறைக்குள் கொண்டு வரப்பட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர்கள் 22 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட ஏ. ராஜா ரத்தினம் (A. Raja Ratanam), கே. சுந்தரேசன் (K. Sunthreson), சி. விஜய குமார் (C. Vijaya Kumar), என். நடராஜா (N. Nadarajah),
டி. ராமன் (T. Raman), ஆர். விஜயன் (R. Vijayan), எம். குமாரன் (M. Kumaaran), என். ஹரிச்சந்திரன் (N. Harichandran), எஸ். மாறன் (S. Maran), சுவரன் சிங் (Suwaran Singh), முகமட் அதிஃப் முகமட் அலி கான் (Mohd Atif Mohammad Ali Khan) 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

நீதிபதி இஸ்ராலிஸாம் சனுசி (Judge Izralizam Sanusi) முன்னிலையில் இந்த 11 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் நடப்பு ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், செந்துல் (Sentul) பகுதியில் இந்த ஆபத்தான ‘Geng RT6’ குற்றவியல் குழுவில் உறுப்பினர்களாக இருந்து செயல்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் மீது வாசித்துக் காட்டப்பட்ட குற்றச்சாட்டுகளைப் புரிந்து கொண்டதாகக் கூறி நீதிமன்றத்தில் இவர்கள் அனைவரும் தங்களின் தலைகளை அசைத்தனர். இக்குற்றச்சாட்டு தண்டனைச் சட்டம் பிரிவு 130V(1)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவர்களுக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை விதிக்கச் சட்டத்தில் இடமுண்டு.

இவ்வழக்கு நாட்டின் உயர் நீதிமன்றத்தின் (High Court) அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், இவர்களது வாக்குமூலம் (Plea) எதுவும் இன்று பதிவு செய்யப்படவில்லை. மேலும், இவர்கள் 11 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் (Bail) வழங்க மறுத்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் ஆவணச் சமர்ப்பிப்பிற்காக வரும் ஜூன் 24-ஆம் தேதியை நீதிபதி இஸ்ராலிஸாம் சனுசி குறிப்பீட்டுள்ளார். இந்த நிழல் உலகக் கும்பலின் பின்னணி குறித்துப் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ‘RT6’ கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

க்ளாடெட் கோல்வின்: ரோசா பாக்ஸிற்கு முன்பே போராடிய வீரச் சிறுமி! Claudette Colvin: The Brave Girl Who Fought Before Rosa Parks!

Next Post

இனி இந்த 3 ராசிக்காரர்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றி! உங்க ராசி என்ன? – Sri Lanka Tamil News

Next Post
இனி இந்த 3 ராசிக்காரர்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றி! உங்க ராசி என்ன? – Sri Lanka Tamil News

இனி இந்த 3 ராசிக்காரர்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றி! உங்க ராசி என்ன? - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin