பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியில் உள்ள பம்பாங்கா, ஏஞ்சல்ஸ் நகரில் இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி ஹோட்டலில் சிக்கியிருந்த மலேசிய குடிமகன் ஒருவர் உயிரிழந்ததை பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஏஞ்சல்ஸ் நகரில் இன்று அதிகாலை கட்டுமானத்தில் இருந்த ஒன்பது மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 26 பேர் மீட்கப்பட்டதாக ஜின்ஹுவா செய்தி முகமையைக் மேற்கோள் காட்டி பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
இடிந்து விழுந்த கட்டிட அமைப்பிலிருந்து 24 பேர் மீட்கப்பட்டனர், அதே நேரத்தில் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அருகிலுள்ள அடுக்குமாடி ஹோட்டலில் இருந்து மற்ற இருவர் மீட்கப்பட்டனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் இது குறித்த புதிய அறிக்கையை அமைச்சகம் வெளியிடும் என்றும், தற்போது இதற்கான விவரங்களைச் சேகரித்து வருவதாகவும் மலேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
முன்னதாக, கட்டிடத்தின் சுவர்களும் சாரமும் வளைந்து இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்கு அடியில் மக்கள் சிக்கிக் கொண்டனர் என்று உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் கூறியதாக செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியிருந்தது.
-fmt
