• Login
Sunday, May 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியா – அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு.. எரிவாயு பிரச்னை,  சர்வதேச விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியா – அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு.. எரிவாயு பிரச்னை,  சர்வதேச விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 24, 2026 5:20 PM IST

உலகில் உள்ள மிகப்பெரிய இரு ஜனநாயக நாடுகள் நாம். ஜனநாயக அமைப்பில் தலைவர்கள் நேரடியாக மக்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. – அமெரிக்க அமைச்சர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியா - அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள்
செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியா – அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள்

இந்தியாவுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் தூதுக்குழு அளவிலான விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாதம் என்பது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு “பொதுவான சவால்” என்று விவரித்தார்.

மேலும், வளைகுடா பிராந்தியத்தில் வேகமாக மாறிவரும் சூழ்நிலைகள் மற்றும் மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலவரங்கள் குறித்து இரு தரப்பும் மதிய உணவு இடைவேளையின் போது தீவிரமாக விவாதிக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். மார்கோ ரூபியோ வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்றாலும், வாஷிங்டன், நியூயார்க் மற்றும் பல்வேறு சர்வதேச மாநாடுகளில் இரு நாட்டு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருந்ததை ஜெய்சங்கர் நினைவு கூர்ந்தார்.

சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான முன்னேற்றங்கள் இந்த ஆலோசனையில் முக்கியப் பங்கு வகித்தன. மார்கோ ரூபியோ முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போதும், பின்னர் தூதரகத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் மேற்கு ஆசியா, இந்தியத் துணைக்கண்டம் மற்றும் கிழக்கு ஆசியாவின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, உக்ரைன் மோதல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஒரே இரவில் நிகழ்ந்துள்ள புதிய திருப்பங்கள் குறித்து இரு அமைச்சர்களும் விரிவாக ஆலோசித்தனர். இக்கட்டான இந்தச் சூழலில், இரு நாடுகளும் வலுவான கூட்டாளிகளாக இருப்பதால், மிகவும் திறந்த மற்றும் உற்பத்தித்திறன் மிக்க விவாதங்களை முன்னெடுக்க முடியும் என்று ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்துப் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்கள் இருப்பது போலவே, பயங்கரவாதம் போன்ற பொதுவான சவால்களும் உள்ளன. இதில் எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவானது” என்றார். மேலும், பயங்கரவாத ஒழிப்புத் துறையில் இரு நாட்டு முகமைகளுக்கும் இடையே நிலவும் வலுவான ஒத்துழைப்பைப் பாராட்டிய அவர், மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் முக்கியக் குற்றவாளியை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா செய்த உதவிகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இதனை வழிமொழிந்து பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, உலகளாவிய பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகளால் இந்தியாவும் அமெரிக்காவும் சமமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

“உலகில் உள்ள மிகப்பெரிய இரு ஜனநாயக நாடுகள் நாம். ஜனநாயக அமைப்பில் தலைவர்கள் நேரடியாக மக்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. உலகளாவிய நிகழ்வுகளைத் தன் பக்கம் திருப்பும் பொருளாதார மற்றும் ராஜதந்திர வலிமை கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று” என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் புகழாரம் சூட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் புதுப்பிக்கப்பட்ட 10 ஆண்டுகால பாதுகாப்பு கூட்டாண்மை கட்டமைப்பு ஒப்பந்தம் மற்றும் இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சிகள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாகப் பேசப்பட்டது. 140 கோடி இந்திய மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியத்தை வலியுறுத்திய ஜெய்சங்கர், அமெரிக்காவுடனான எரிசக்தி வர்த்தக விரிவாக்கத்தை வரவேற்றார்.

உலகளவில் எரிசக்தி துறையில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

இந்தியா – அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு.. எரிவாயு பிரச்னை,  சர்வதேச விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை

Read More

Previous Post

கோவையை உலுக்கிய சிறுமியின் கொடூரக் கொலை! குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை நிச்சயம் – முதல்வர் விஜய்

Next Post

Issue at Hormuz Strait | ஈரான் – அமெரிக்காவின் குழப்பமான அறிக்கைகளால், ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம்! | உலகம் போட்டோகேலரி

Next Post
Issue at Hormuz Strait | ஈரான் – அமெரிக்காவின் குழப்பமான அறிக்கைகளால், ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம்! | உலகம் போட்டோகேலரி

Issue at Hormuz Strait | ஈரான் - அமெரிக்காவின் குழப்பமான அறிக்கைகளால், ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம்! | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin