அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தற்போது இந்திய பயணத்தில் இருக்கிறார்.
நேற்று இந்தியாவில், “அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ என்கிற விசா நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளார் அவர்.
அமெரிக்கா ஃபர்ஸ்ட் என்பது நவீன டிஜிட்டல் நடைமுறை ஆகும்.
அமெரிக்க விசாவிற்காக விண்ணப்பிப்பவர்களில் ‘அமெரிக்காவில்’ வணிகம் மற்றும் பிசினஸிற்காக விண்ணப்பிப்பவர்களை இந்த நடைமுறை முன்னிலைப்படுத்தும்.
அவர்களுக்கான விசா நேர்காணலையும் இந்த நடைமுறை விரைவுப்படுத்தும்.
இந்த நடைமுறை அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“இந்தியா – அமெரிக்கா பிசினஸ் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வணிக வல்லுநர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஒரு புதிய ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ விசா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
ஆனால், இந்த வசதி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமேயானது அல்ல. அமெரிக்காவின் தேசிய நலனையும், தேசிய பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு நாளும் முன்னணியில் நின்று உழைக்கும் அமெரிக்க தூதரகத்தின் ஊழியர்களுக்கும் இது முக்கியமானது.

