Last Updated:
வெடிவிபத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சீனாவின் ஷான்சி (Shanxi) மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் கின்யுவான் மாவட்டத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் வெள்ளிக்கிழமையன்று திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால், சுரங்கம் சரிந்து விழுந்ததில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர்.
A gas explosion at a coal mine in Shanxi Province, China killed at least 82 people and left 2 missing on Friday evening.
Of the 247 workers underground at the time, 128 were hospitalized.
Company executives have been detained.
President Xi Jinping ordered an investigation… pic.twitter.com/HFvfWr6UHy
— Clash Report (@clashreport) May 23, 2026
உடனடியாக மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதில், 90 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் கடந்த 25 ஆண்டுகளாக, கடுமையான விதிமுறைகள் காரணமாக, நிலக்கரிச் சுரங்கங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. லியுஷென்யு நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து சம்பவம், கடந்த பத்தாண்டுகளில் சீனாவில் பதிவான மிகவும் மோசமான சம்பவங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
China | சீன நிலக்கரி சுரங்கத்தில் திடீர் வெடிவிபத்து… 200+ தொழிலாளர்கள் சிக்கியதால் அச்சம்!


