சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 10-வது முறையாக iLight ஒளிக்காட்சி நிகழ்ச்சியானது நடைபெற விருக்கிறது.
மே மாத இறுதியில் தொடங்கும் நிகழ்ச்சியானது ஜூன் மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெறும்.
நிகழ்ச்சியானது தஞ்சோங் பகார் வரை நீட்டிப்பது இதுவே முதன்முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒளிக்காட்சி நிகழ்ச்சியானது மரினா பே ,சவுத் பீச் ரோடு, மில்லேனியா வாக் ஆகிய இடங்களிலும் நடைபெற உள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 25 கலைஞர்களின் 17 கலைப்படைப்புகள் நிகழ்ச்சியில் இடம்பெறும்.
இந்த ஆண்டிற்கான கருப்பொருள்,“Cyclical Nature”.
“இதன் மூலம் நாம் பயன்படுத்தும் அன்றாட பொருட்களை எப்படி மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம் என்பதனையும் அதன் மறுபயன்பாடு குறித்தும்” இந்த ஆண்டிற்கான கருப்பொருள் விளக்கும்.

