அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் திருமணத்தில் கலந்துகொள்வார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போதைய சூழலில் அங்கு செல்வது பாதுகாப்பானது இல்லை என்று கருதுகிறார் டிரம்ப். ஆம், ஈரான் உடன் போர் நடக்கும் இந்த நேரத்தில் தான் திருமணத்தில் கலந்து கொண்டால், அது தன் உயிருக்கே ஆபத்தாகிவிடுமோ என்று டிரம்ப் நினைப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஈரான் மீதான அச்சத்தின் காரணமாக டிரம்ப் தனது சொந்த நாட்டிலேயே பயணம் செய்ய அஞ்சுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


