Last Updated:
தமிழ்நாட்டில் 35 ஆயிரம் மருந்துக் கடைகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அசோக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் நாளை மருந்துக் கடை உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 35 ஆயிரம் மருந்துக் கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் அதிக அளவில் தள்ளுபடி விலையில் மருந்துகளை விற்பனை செய்வதற்கு அனைத்திந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏஐ மூலம் போலியாக உருவாக்கப்பட்ட மருத்துவ பரிந்துரை சீட்டுகளுக்கு, ஆன்லைனில் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனைக் கண்டித்து, நாடு முழுவதும் நாளை மருந்துக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மருந்தக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கு தமிழ்நாட்டில் 35 ஆயிரம் மருந்துக் கடைகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அசோக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 40 ஆயிரம் மருந்துக் கடைகளில், மருத்துவமனைகளில் உள்ள 5 ஆயிரம் மருத்துவக் கடைகள் மட்டும் வழக்கம் போல் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.


