உலகெங்கிலும் உள்ள வர்த்தக மசகு எண்ணெய் கையிருப்பு (Commercial oil inventories) மிக வேகமாக குறைந்து வருவதாக சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவர் பாத்தி பிரோல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தற்போதைய நிலையில் இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே போதுமான வர்த்தக எண்ணெய் கையிருப்பு எஞ்சியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விமான எரிபொருள்
சந்தை நெருக்கடியைச் சமாளிக்க மூலோபாய எண்ணெய் இருப்புகளிலிருந்து நாளொன்றுக்கு 2.5 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் சந்தைக்குள் விடுவிக்கப்பட்ட போதிலும், இந்த இருப்புக்கள் முடிவற்றவை அல்ல என அவர் கூறியுள்ளார்.

வட அரைக்கோள நாடுகளில் வசந்த கால பயிர்ச்செய்கை மற்றும் கோடைகால பயணப் பருவம் ஆரம்பமாகவுள்ளதால் டீசல், உரம், விமான எரிபொருள் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் எனவும் இது எண்ணெய் இருப்புக்களை இன்னும் வேகமாக நுகரச் செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
வர்த்தக ரீதியிலான எண்ணெய் கையிருப்பு இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்பதால், அது மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருவது குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

