இந்த சிறப்பு முகாம்களில் நில உடைமை பதிவு, இ-கே.ஒய்.சி. பதிவு, விவசாயிகளுக்கான அடையாள எண் பெறுதல், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் மற்றும் அலைபேசி எண்ணை பி.எம். கிசான் திட்டத்துடன் இணைத்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.இதற்காக வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை வணிகத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


