Last Updated:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் உடன் நின்று நார்வே தனது உண்மையான நட்பை நிரூபித்தததாக கூறினார்.
43 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேயில் பிரதமர் சென்றுள்ள நிலையில், பசுமை உத்திசார் கூட்டாண்மை உட்பட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஐந்து நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் 4-வது நாடாக பிரதமர் நரேந்திர மோடி நார்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவிற்குச் சென்றுள்ளார்.
43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் நார்வே நாட்டிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
இந்த நிலையில், இரு தலைவர்களும் அரசு விருந்தினர் மாளிகையில் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உயர்தர சுகாதார சேவைகள், டிஜிட்டல் சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு, மருத்துவ தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆகியவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, நான் கடந்த ஆண்டு நார்வேக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தேன், ஆனால் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது. அந்த இக்கட்டான காலகட்டத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் உறுதியாக நின்று, நார்வே உண்மையான நட்புறவை வெளிப்படுத்தியது. இன்று உலகம் நிலையற்ற தன்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையைக் கடந்து செல்கிறது.
இந்தச் சூழலில், இந்தியாவும் ஐரோப்பாவும் தங்களது உறவில் ஒரு புதிய ‘பொற்காலத்தில்’ நுழைகின்றன. கடந்த ஆண்டு, இந்தியாவும் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கமும் (EFTA) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தைச் செயல்படுத்தின. இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்கும் நார்வேக்கும் இடையே பகிரப்பட்ட வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்கான ஒரு வரைபடமாக அமைகிறது. இந்த ஒப்பந்தம், அடுத்த பதினைந்து ஆண்டுகளில் இந்தியாவிற்கு மொத்தம் 100 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்ப்பதையும், ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் இலக்காக நிர்ணயிக்கிறது.” என்றார்.
#WATCH | Oslo, Norway: Prime Minister Narendra Modi says, “… I was scheduled to visit Norway last year, but that trip had to be postponed due to the terrorist attack in Pahalgam. During that difficult period, Norway demonstrated the true spirit of friendship by standing firmly… pic.twitter.com/biyFwtOGUA
— ANI (@ANI) May 18, 2026
நார்வே அரசு, தனது நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான Grand Cross of the Royal Norwegian Order of Merit விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
சர்வதேச அளவில் பிரதமர் மோடி பெறும் 32-வது உலகளாவிய விருது இதுவாகும்.

