Last Updated:
பொலிவியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
ஊழல், பொருளாதார சிதைவு என பொலிவியா அதிபருக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மக்கள், அவர் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், எல் ஆல்டோ மற்றும் லா பாஸ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பாதுகாப்புப் படைக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் அந்த இடமே களவர பூமி போல் காட்சி அளித்தது. அதேநேரம், முன்னாள் அதிபர் எவோ மோரல்ஸ் (Evo Morales) பொதுமக்களை தூண்டிவிட்டு போராட்டத்தை நிகழ்த்துவதாக அரசு தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


