கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசேட வைத்தியர்களும், ஏனைய வைத்தியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கணிசமான எண்ணிக்கையிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள முக்கிய மருத்துவமனைகள் மற்றும் கிராமப்புற மருத்துவமனைகளில் சுகாதார சேவைகளைப் பராமரிப்பதில் கடும் சிரமங்கள் ஏற்படும் என்றும் சமல் சஞ்சீவ சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு மருத்துவப் பரீட்சைகள்
மயக்க மருந்து நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் இளம் வைத்தியர்கள் உட்பட சுகாதாரத்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமிக்க வைத்தியர்கள், வெளிநாட்டு மருத்துவப் பரீட்சைகளில் சித்தியடைந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதன் காரணமாக தற்போது மருத்துவமனைகளில் பணிபுரியும் வைத்தியர்கள் தங்களது சாதாரண கடமைகளுக்கும் மேலாக கூடுதல் கடமைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

