இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மத்திய கிழக்கு போர் தொடங்கியதில் இருந்து சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பைச் சந்தித்துள்ளன. இந்த 3 ரூபாய் விலை உயர்வு, எண்ணெய் நிறுவனங்களின் மாதாந்திர இழப்பான 55 ஆயிரம் கோடி ரூபாயில் வெறும் ஐந்தாயிரம் கோடியை மட்டுமே குறைக்கும். அதாவது, தினசரி இழப்பு 1,600 கோடியிலிருந்து 1,100 கோடி ரூபாயாக குறையுமே தவிர, நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்திலேயே தான் இயங்கும். ஒரு புறம் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், மறுபுறம் ரூபாய் மதிப்பு சரிவு என இந்தியா இரட்டை தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.


