Last Updated:
கடந்த 2024-ஆம் ஆண்டு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 85ஆக இருந்த நிலையில், தற்போது 95 ரூபாயாக சரிந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து, 95 ரூபாய் 94 காசுக்கு வர்த்தகமானது.
மேற்காசிய போர், கச்சா எண்ணெய் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதன் உச்சமாக, வர்த்தக வார இறுதி நாளில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து, 95 ரூபாய் 94 காசாக இருந்தது.
கடந்த 2000-ஆம் ஆண்டில் 1 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 45 ஆக இருந்தது. இது அடுத்த 12 ஆண்டுகளில், அதாவது 2012 ஆம் ஆண்டில் 10 ரூபாய் சரிந்து, 55 ஆக வர்த்தகம் ஆனது. ஆனால், அடுத்த ஓராண்டிற்குள் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 65 ஆக சரிந்தது.
அடுத்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய ரூபாயின் மதிப்பு 75 ஆக சரிந்து வர்த்தகமானது. கடந்த 2024-ஆம் ஆண்டு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 85ஆக இருந்த நிலையில், தற்போது 95 ரூபாயாக சரிந்துள்ளது.


