பணமே இல்லாமல் தேர்தலை சந்தித்த வரலாற்றை உருவாக்கி காட்டியவர் முதலமைச்சர் விஜய் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நான் தான் எல்லாம் என்று எண்ணிய எடப்பாடி பழனிசாமியின் கனவு தூள்தூளாகி விட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தூய்மையான ஆட்சி
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் தூய்மையான ஆட்சி வர வேண்டும் என்று இளைஞர்கள், பெண்கள், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை கள் விரும்பினார்கள்.

அதன் அடிப்படையில் சிறந்த ஆட்சி கொடுக்க நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதை வீழ்த்தி, பணமே இல்லாமல் பணமே இல்லாமல் தேர்தலை சந்தித்த வரலாற்றை உருவாக்கி காட்டியவர் முதலமைச்சர் விஜய்.
தமிழகத்தில் நல்லாட்சி, சிறந்த ஆட்சியை தருவதற்கு இனி எதிர்காலத்தில் தமிழகத்தின் நிரந்தர முதல்-அமைச்சர் என்ற வரலாறு முதல்-அமைச்சர் விஜயால் மட்டுமே படைக்கப்படும்.
மக்கள் மீதும், கட்சியை கட்டி காத்த தலைவர்கள் மீதும் அக்கறை இல்லாதவர்களுக்குதான் இப்போது சரிவு ஏற்பட்டு உள்ளது.
ஆத்மா அவருக்கு தண்டனை
ஏனென்றால் அத்திக்கடவு-அவினாசி திட்டம் வரும்போது, எம்.ஜி.ஆர். படம், ஜெயலலிதா படம் தேவையில்லை.

நான்தான் அதை நிறைவேற்றி காட்டினேன் என்று தன் படத்தை வைத்துக்கொண்டு பாராட்டு கூட்டத்தை நடத்தியவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பதை நாடு தெரிந்து கொண்டு இருக்கிறது.
தற்போதும் என் சட்டைப்பையில் ஜெயலலிதா படம் தான். எம்.ஜி.ஆர். படம், ஜெயலலிதா படம் வேண்டாம். தன் படம் மட்டுமே போதும், நான் தான் எல்லாம் என்று எண்ணிய எடப்பாடி பழனிசாமியின் கனவு தூள்தூளாகி விட் டது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆத்மா தற்போது அவருக்கு தண்டனை கொடுத்துக்கொண்டு இருக்கிறது என்றார்.
இதேவேளை தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக 01.01.2026 முதல் கணக்கிடப்பட்டு 60 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

