Last Updated:
நீண்ட நேரமாகியும் அந்த வழியாக பேருந்து ஏதும் வராமல் இருந்துள்ளது. இதனால், அருகில் நின்றிருந்த தனியார் ஆம்னி பேருந்து அருகே சென்றார். அங்கிருந்த பேருந்து நடத்துநரிடம் டைம் கேட்டுள்ளார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் மங்கோல்புரியில் உள்ள தொழிற்சாலையில் பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர், இரவில் பணி முடிந்து சரஸ்வதி விஹார் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தார். நீண்ட நேரமாகியும் அந்த வழியாக பேருந்து ஏதும் வராமல் இருந்துள்ளது. இதனால், அருகில் நின்றிருந்த தனியார் ஆம்னி பேருந்து அருகே சென்றார். அங்கிருந்த பேருந்து நடத்துநரிடம் டைம் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பெண்ணுக்கு டயத்தை சொல்லுவதற்குப் பதில் அவருக்கு லிப்ட் தருவதாக கூறியுள்ளார். தனியாக அவருடன் செல்வதற்கு அஞ்சிய பெண் அதை ஏற்க மறுத்துள்ளார். இருந்தபோதும் அந்த பெண்ணை வம்பிடியாக இழுத்து ஓட்டுநரும், நடத்துநரும் பேருந்துக்குள் தள்ளியுள்ளனர். பின்னர் ஓட்டுநர் பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். நாங்லோய் பகுதியைச் நோக்கி சென்ற பேருந்தில், இருவரும் பெண்ணை மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பெண்ணை கீழே இறக்கிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் ராணி பாக் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து அதன் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் பெண்ணிடம் அத்துமீறியது உறுதியானதால் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் நினைவுபடுத்துவதாக ஆம் ஆத்மி உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 23 வயது மருத்துவ மாணவி கொடூரமாக தாக்கப்பட்டு சாலையில் வீசப்பட்ட நிலையில் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வேலைக்கு சென்ற பெண் இரவில் தனியாக நின்றபோது வழுக்கட்டாயமாக ஆம்னி பேருந்துக்குள் இழுத்துப் போட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தலைநகரில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
Delhi,Delhi,Delhi
பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. ஸ்லீப்பர் பஸ்ஸில் வலுக்கட்டாயமாக ஏற்றி அத்துமீறல்..!


