Last Updated:
கால்பந்து வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஈரான் அதிபர் மசூத், தனது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டார்.
உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க அமெரிக்காவுக்கு புறப்பட்ட இந்த ஈரான் கால்பந்து அணியை ரசிகர்கள் உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர்.
23 ஆவது உலகக்கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதலால், கால்பந்து உலகக்கோப்பையில் ஈரான் பங்கேற்குமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில், அமெரிக்கா புறப்பட்ட ஈரான் கால்பந்து அணியை அந்நாட்டு தலைநகர் டெஹ்ரானில் ரசிகர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
Iran’s National Football Team Sendoff Event
They unveiled Iran’s official kit for the 2026 FIFA World CupThe national team players and the people together sang the national anthem in Enghelab Square, Tehran. pic.twitter.com/Y1Pkvkkdxh
— Ryan Rozbiani (@RyanRozbiani) May 13, 2026
மேலும் கால்பந்து வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஈரான் அதிபர் மசூத், தனது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டார். போர் சூழலிலும் தங்களின் கடமையை நிறைவேற்ற ஈரான் கால்பந்து வீரர்கள் களத்திற்கு செல்வதாக அந்நாட்டின் கால்பந்து சம்மேளனத் தலைவர் Mehdi Taj தெரிவித்துள்ளார்.


