மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தீவிர போர் பதற்றம் காரணமாக, உலக எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் சமீபத்தில் அதிகரித்திருந்த நிலையில் மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.
உலகளாவிய சந்தை நிலவரப்படி, அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 100.8 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.
அதேவேளை, சர்வதேச சந்தையில் அதிகமாக பயன்படுத்தப்படும் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.5 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
சர்வதேச அரசியல் பதற்றங்கள்
அதேநேரத்தில், இயற்கை எரிவாயு (Natural Gas) விலையிலும் மாற்றம் ஏற்ப்பட்டுள்ள நிலையில், அதன் விலை இன்று 2.879 அமெரிக்க டொலராக உயர்வை பதிவு செய்துள்ளது.

சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் விநியோகக் பிரச்சினைகள் காரணமாக எரிசக்தி சந்தையில் தொடர்ச்சியான ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

