Last Updated:
திடீரென்று நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டால் அச்சம் அடைந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுரெட்டி (Rodrigo Duterte) போதைப் பொருள் ஒழிப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அப்போதைய காவல்துறை தலைவராக இருந்த ரொனால்ட் டெலா ரோசா (Ronald dela Rosa) மீது மனிதத்தன்மைக்கு எதிரான குற்ற வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பதியப்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு
ரொனால்ட் டெலா ரோசாவை கைது செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை கண்டித்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், பாதுகாப்பு கருதி அந்நாட்டின் நாடாளுமன்றத்திலேயே ரொனால்டு பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், திடீரென்று நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினான்ட் மார்கோஸ் தெரிவித்துள்ளார்.


