• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அம்பலாந்தோட்டையில் கொடூர சம்பவம் : வெளியான அதிர்ச்சி தகவல்கள்

GenevaTimes by GenevaTimes
May 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அம்பலாந்தோட்டையில் கொடூர சம்பவம் : வெளியான அதிர்ச்சி தகவல்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.



இந்த கொலைச் சம்பவம் அம்பலாந்தோட்டை – மாமடல பகுதியில் கடந்த 11.05.2026 ஆம் திகதி இரவு இடம்பெற்றது. 



சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின்னர், அவரது தலையை துண்டித்து தேவியின் சிலையில் வைத்து சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

முக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்


இவ்வாறு உயிரிழந்தவர், 34 வயதுடைய ‘பொடி’ என அழைக்கப்படும் லக்மால் சந்தருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அம்பலாந்தோட்டையில் கொடூர சம்பவம் : வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Information Released Regarding Murder In Mamadalal



மேலும், உயிரிழந்த லக்மால் சந்தருவன் கடந்த பெப்ரவரி மாதம் மாமடல பகுதியில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபராக இருந்து, மார்ச் 30ஆம் திகதி பிணையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உயிரிழந்தவரின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற தினமே சமீர உதயங்க என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றைய இரு சந்தேகநபர்களும் பின்னர் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபான வியாபாரம் 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் சகோதரர் முன்னர் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கான பழிவாங்கும் நோக்கிலேயே இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அம்பலாந்தோட்டையில் கொடூர சம்பவம் : வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Information Released Regarding Murder In Mamadalal

முன்னதாக உயிரிழந்தவரின் குழுவினரால் கொல்லப்பட்ட ‘மெத்த பொடி’ என்பவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ள ‘மெத்த லொக்கு’வின் மூத்த சகோதரர் எனவும் தெரியவந்துள்ளது.


சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பான தகவல்களை காவல்துறைக்கு வழங்கியதாக ஏற்பட்ட சந்தேகமே இந்த மோதல்களின் அடிப்படை காரணமாக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 



மேலும், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் தலையை துண்டித்து தேவியின் சிலையில் வைக்கும் திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதற்குப் பின்னணியில் ‘கருணா லொக்கா’ என அழைக்கப்படும் ரஞ்சித் பிரியந்த எதிரிவீர இருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணை


பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கருணா லொக்கா, சம்பவம் நடந்த தினமே தமக்கு எதிரான பிடியாணை காரணமாக நீதிமன்றத்தில் சரணடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அம்பலாந்தோட்டையில் கொடூர சம்பவம் : வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Information Released Regarding Murder In Mamadalal

இதுவும் இந்தக் கொலை வழக்கிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

Gold Ban | இந்தியாவில் தங்கம் வாங்க தடை..? சட்டம் சொல்வது என்ன..? ரூல்ஸ் இதுதான்..! | வணிகம் போட்டோகேலரி

Next Post

Sugar Exports | அனைத்துவகை சர்க்கரை ஏற்றுமதிக்கும் தற்காலிக தடை… மத்திய அரசின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்? | இந்தியா போட்டோகேலரி

Next Post
Sugar Exports | அனைத்துவகை சர்க்கரை ஏற்றுமதிக்கும் தற்காலிக தடை… மத்திய அரசின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்? | இந்தியா போட்டோகேலரி

Sugar Exports | அனைத்துவகை சர்க்கரை ஏற்றுமதிக்கும் தற்காலிக தடை... மத்திய அரசின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்? | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin