சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை 2026 ஓகஸ்ட் 25 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிரதி காவல்துறை மா அதிபராக (DIG) தரம் உயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு நீதிமன்றம் (AAT) பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பரிந்துரை நேற்று புதன்கிழமை (13) தேசிய காவல்துறைஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஷானி அபேசேகர பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காலப்பகுதியிலிருந்து அவருக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தையும் உடனடியாக வழங்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காவல்துறை சேவை
கடந்த 2020 ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு சுமார் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், பின்னர் 2024 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, 3/2018 இலக்க சுற்றறிக்கையின் கீழ் மீண்டும் காவல்துறை சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட அவர், தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராகப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
