Last Updated:
“நீடித்த உலகளாவிய நிச்சயமற்ற நிலைக்கு இந்தியா தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும், “வருமானத்திற்கு மீறி வாழ்வதைத் தவிர்க்க வேண்டும்” என்றும் கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக் கூறினார்.
நாட்டுக்கு ஒரு அதிர்ச்சி வரவிருக்கிறது என கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தியத் தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர மாநாட்டில் உரையாற்றிய கோடக், உலக அளவில் எரிசக்தி அபாயங்கள் அதிகரித்து வரும் சூழலில், நாடு தனது வருமானத்தை மீறி வாழும் வலையில் சிக்கக் கூடாது என்று கூறினார்.
சிக்கனம் மற்றும் மிதமான நுகர்வு குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய கருத்துக்களுக்கு அவர் ஆதரவு தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு பெரும் கவலையாக இருப்பதாக கோடக் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கு மோதலின் தாக்கம் உலகளாவிய எரிசக்தி விலைகளில் இன்னும் முழுமையாகப் பதியவில்லை என்று கோடக் எச்சரித்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக மத்திய கிழக்கு போரின் தாக்கத்தை, எரிசக்தி விலைப் பரிமாற்றத்தின் அடிப்படையில் நாம் காணவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அது மிகப் பெரிய அளவில் வரப்போகிறது என்றார்.
அனைத்துத் துறைகளிலும் அதிகரித்து வரும் எரிபொருள் சார்ந்த செலவுகளால், குறைந்த வருமானம் கொண்ட நுகர்வோர் விரைவில் அழுத்தத்தை உணர்வார்கள் என்று தெரிவித்தார்.
வரப்போகும் அதிர்ச்சி குறித்து எச்சரித்த கோடக், வணிக நிறுவனங்களையும் கொள்கை வகுப்பாளர்களையும் முன்கூட்டியே தயாராகுமாறு வலியுறுத்தினார்.
“நிகழ்வுக்கு முன்பே நாம் பதற்ற உணர்வுக்குத் தயாராக வேண்டும் என்பதே என் கருத்து. மேலும், கடினமான காலங்கள் வராமல் அல்லது நீடிக்காமல் இருக்க வேண்டும் என்று நாம் நம்ப வேண்டும். ஆனால், மிக மோசமான நிலைக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.”என்றும் அவர் குறிப்பிட்டார்.
Delhi,Delhi,Delhi
Energy Crisis | “நாட்டுக்கு ஓர் அதிர்ச்சி வரவிருக்கிறது…” – கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் முக்கிய அட்வைஸ்

