• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் பும்ரா! டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ஜெய்ஸ்வால், சுப்மன் கில்.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
May 13, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் பும்ரா! டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ஜெய்ஸ்வால், சுப்மன் கில்.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 13, 2026 6:37 PM IST

2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் உள்நாட்டில் விளையாடிய பிறகு இந்தியா இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பும்ரா விளையாடவில்லை

ஜஸ்பிரித் பும்ரா
ஜஸ்பிரித் பும்ரா

ஐசிசி (ICC) இன்று வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட சமீபத்திய டெஸ்ட் தரவரிசையின்படி, பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 879 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக உள்நாட்டில் விளையாடிய பிறகு இந்தியா இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், பும்ராவின் புள்ளி விவரங்கள் அவரை உச்சத்திலேயே வைத்துள்ளன.

இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்தின் மேட் ஹென்றி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

மற்ற இந்திய பந்துவீச்சாளர்களில் முகமது சிராஜ் (12-வது இடம்), ரவீந்திர ஜடேஜா (14-வது இடம்) மற்றும் குல்தீப் யாதவ் (15-வது இடம்) ஆகியோர் முதல் 15 இடங்களுக்குள் உள்ளனர்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையைப் பொறுத்தவரை, இளம் இந்திய வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முறையே 8 மற்றும் 9-வது இடங்களைப் பிடித்துள்ளனர். ஜெய்ஸ்வால் 750 புள்ளிகளுடனும், ஒரு இடம் முன்னேறியுள்ள கில் 730 புள்ளிகளுடனும் உள்ளனர்.

இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 880 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார். அவரைத் தொடர்ந்து ஹாரி புரூக் (2-வது இடம்), டிராவிஸ் ஹெட் (3-வது இடம்) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (4-வது இடம்) ஆகியோர் உள்ளனர்.

பும்ராவின் நிலையான பந்துவீச்சு மற்றும் இளம் பேட்டர்களின் வளர்ச்சி இந்திய கிரிக்கெட்டிற்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

Read More

Previous Post

விஜய் விவகாரத்தில் மரபை மீறிய அநுர : ஐ.தே.க குற்றச்சாட்டு

Next Post

டிரம்புக்கு சீனாவில் பிரம்மாண்ட வரவேற்பு..! ஷி ஜின்பிங்குடன் முக்கிய சந்திப்பு தொடக்கம்..! – Sri Lanka Tamil News

Next Post
டிரம்புக்கு சீனாவில் பிரம்மாண்ட வரவேற்பு..! ஷி ஜின்பிங்குடன் முக்கிய சந்திப்பு தொடக்கம்..! – Sri Lanka Tamil News

டிரம்புக்கு சீனாவில் பிரம்மாண்ட வரவேற்பு..! ஷி ஜின்பிங்குடன் முக்கிய சந்திப்பு தொடக்கம்..! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin