• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரானின் நேரடி எதிரியாக மாறிய மற்றொரு நாடு… இனி போர்ப் பதற்றம் மேலும் உயரும்? முழு அலசல்! | DECODE | Iran | Israel | Ceasefire | UAE | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 13, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஈரானின் நேரடி எதிரியாக மாறிய மற்றொரு நாடு… இனி போர்ப் பதற்றம் மேலும் உயரும்? முழு அலசல்! | DECODE | Iran | Israel | Ceasefire | UAE | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லாவன் தீவு மீதான தாக்குதல்:

இந்த லாவன் தீவு, பாரசீக வளைகுடாவின் வடக்கு பகுதியில், ஈரானின் பிரதான கரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுமார் 76 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்தத் தீவு, ஈரானின் கடல் எல்லைப் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈரானின் ‘எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையின் முதுகெலும்பாகவும்’ கருதப்படுகிறது.

இங்குள்ள சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு சுமார் 60,000 பேரல் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. ஈரானின் உள்நாட்டு எரிபொருள் தேவைக்கு, குறிப்பாக தெற்குப் பகுதிக்கு மிக முக்கியமானது. பாரசீக வளைகுடாவில் இருந்து கச்சா எண்ணெயைச் சர்வதேசச் சந்தைக்கு அனுப்பும் மிகப்பெரிய ஏற்றுமதி முனையங்களில் லாவன் சுத்திகரிப்பு ஆலையும் ஒன்று. இங்குள்ள ஆழ்கடல் தளம் மிகப்பெரிய எண்ணெய் கப்பல்கள் வந்து செல்ல வசதியானது. இந்தத் தீவைச் சுற்றி ‘லாவன் கேஸ் ஃபீல்ட்’ (Lavan Gas Field) என்ற பெரிய இயற்கை எரிவாயுப் பகுதி உள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படையின் கடற்படைத் தளங்களில் ஒன்றும் இங்கு உள்ளது. ஹார்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடாவைக் கண்காணிக்கும் முக்கியமான கண்காணிப்பு மையமாகவும் செயல்படுகிறது.

குறிப்பிடவேண்டும். சுத்திகரிப்பு நிலையத்தின் மிக முக்கியமான பகுதிகளை மட்டுமே குறிவைத்து தாக்கும் திறன் கொண்ட லேசர் வழிகாட்டுதல் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா – ஈரான் – பாகிஸ்தான் பிரச்சனை

இந்தத் தாக்குதலில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு அதன் உற்பத்தித் திறன் முடங்கியது. அமீரகம் அதிகாரப்பூர்வமாகப் போரில் ஈடுபடவில்லை என்று கூறி வந்த நிலையில், இந்தத் தாக்குதலை மிகவும் ரகசியமாக நடத்தியுள்ளது. ஏப்ரல் 8-ல் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் லாவன் தீவின் வானத்தில் கரும்புகை சூழ்ந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. தாக்குதலுக்கு முன்னதாக உளவு பார்ப்பதற்காகவும், தாக்குதலுக்குப் பிறகு சேதங்களை மதிப்பிடுவதற்காகவும் அமீரகத்தின் ‘விங் லூங் II’ (Wing Loong II) ரக டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் ஈரானில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மட்டுமே தாக்குதல் நடத்தி வருவதாக கருதப்பட்ட நிலையில் ஐக்கிய அரபு அமீரகமும், மிகப்பெரிய அளவிலான தாக்குதல் மேற்கொண்டிருப்பது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அமெரிக்கா போரின் போது, ஐக்கிய அரபு அமீரகம் மீது, ஈரான் 2,800-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியிருந்தது. அமெரிக்கா மீது ஈரான் நேரடி தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது என்பதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இலக்காக கொண்டு ஏவுகணைகளை வீசியது.

அமீரகம் ஈரானுக்கு எதிரானது ஏன்?

அமீரகத்தில் அமெரிக்காவிற்கு சொந்தமான அல் தஃப்ரா (Al Dhafra) விமான படைத் தளம் செயல்பட்டு வருகிறது. இங்கு அமெரிக்காவின் 380-வது வான்வழிப் படை நிலைகொண்டுள்ளது. இந்த தளத்தை இலக்காக கொண்டு ஈரான் நடத்திய தாக்குதல்களில் அபுதாபி சர்வதேச விமான நிலையம், முசாஃபா (Mussafah) தொழில்துறை பகுதி, துபாய், ஜெபல் அலி (Jebel Ali) துறைமுகம், புஜைரா (Fujairah) துறைமுகம், ஷார்ஜா ஆகிய பகுதிகள் கடுமையான பாதிக்கப்பட்டன.

ரகசியத் தாக்குதலை நடத்தியதாகக் கருதப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் இடையிலான உறவு, பல தசாப்தங்களாக வணிக ரீதியான நெருக்கத்தையும், அரசியல் ரீதியான மோதல்களையும் கொண்ட ஒரு சிக்கலான உறவாகும்.

நீண்ட காலமாக, ஈரானின் இரண்டாவது மிகப்பெரிய business partner-ஆக அமீரகம் இருந்து வருகிறது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தாண்டி, ஈரான் உலக நாடுகளுடன் வணிகம் செய்ய துபாயின் ‘ஜெபல் அலி’ (Jebel Ali) துறைமுகம் ஒரு நுழைவாயிலாகச் செயல்பட்டது.

ஈரான் விஷயத்தில் அமீரகத்தின் பிரச்சனை என்ன?

பாரசீக வளைகுடாவில் உள்ள Abu Musa, the Greater Tunb, Lesser Tunb, ஆகிய மூன்று தீவுகள் தங்களுக்குச் சொந்தமானது என அமீரகம் கூறி வருகிறது. ஆனால், இவை 1971 முதல் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதுவே இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பகைக்கு அடிப்படைக் காரணம். இந்த மூன்று தீவுகளும் பாரசீக வளைகுடாவின் நுழைவாயிலான ஹார்முஸ் நீரிணைக்கு மிக அருகில் அமைந்துள்ளன.

அபு மூசா தீவு (Abu Musa) : இது சுமார் 12 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த மூன்று தீவுகளிலேயே பெரியது மற்றும் மக்கள் வசிக்கக்கூடியது. இங்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் உள்ளன.

Greater Tunb: சுமார் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இது ராணுவ ரீதியாக ஈரானுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Lesser Tunb: வெறும் 2 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட ஒரு சிறிய பாறைத் தீவு. இங்கு மனிதர்கள் வசிப்பதில்லை.

பிரிட்டிஷ் படைகள் இப்பகுதியை விட்டு வெளியேறிய போது, அமீரகம் ஒரு தனி நாடாக உருவாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரானிய கடற்படை இந்தத் தீவுகளைக் கைப்பற்றியது. அபு மூசா தீவு தொடர்பாக ஈரானுக்கும் ஷார்ஜா அமீரகத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, தீவின் ஒரு பகுதியை ஈரானும், மறுபகுதியை ஷார்ஜாவும் நிர்வகிக்கும் என முடிவானது. ஆனால், காலப்போக்கில் ஈரான் தீவு முழுவதையும் தனது ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. Greater Tunb மற்றும் Lesser Tunb தீவுகள் மீது ராஸ் அல்-கைமா (Ras Al Khaimah) உரிமை கோரியது. ஆனால் ஈரான் இவற்றை வலுக்கட்டாயமாகப் பிடித்துக்கொண்டது.

ராஸ் அல்-கைமா (Ras Al Khaimah) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் வடகோடியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான அமீரகமாகும். Greater Tunb மற்றும் Lesser Tunb தீவுகள் விவகாரத்தில் இந்த மாநிலம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. சர்ச்சைக்குரிய இரண்டு தீவுகளும் வரலாற்று ரீதியாக ராஸ் அல்-கைமா அமீரகத்திற்குச் சொந்தமானவை. 1971-ல் ஈரான் இந்தத் தீவுகளைக் கைப்பற்றியபோது, அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது ராஸ் அல்-கைமா தான். இந்தத் தீவுகள் பறிபோனதைக் கண்டித்து, ஆரம்பத்தில் ஐக்கிய அரபு அமீரகக் கூட்டமைப்பில் இணைய ராஸ் அல்-கைமா மறுத்தது. பின்னர், 1972-ல்தான் இது அமீரகத்தின் ஏழாவது மாநிலமாக இணைந்தது.

உலகின் 20% வரையிலான கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறும் நிலையில், இந்தத் தீவுகளைக் கட்டுப்படுத்துபவர்கள் சர்வதேச எரிசக்தி சந்தையைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறுகிறார்கள். இந்தத் தீவுகளில் ஈரான் தனது ஏவுகணைத் தளங்கள், டிரோன் ஏவுதளங்கள் மற்றும் அதிநவீன ரேடார்களை நிறுவியுள்ளது. இது அமீரகம், சவூதி அரேபியா மற்றும் அமெரிக்க ராணுவக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஈரானுக்கு உதவுகிறது. சமீபத்தில் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இந்த விவகாரத்தில் அமீரகத்தின் பேச்சுவார்த்தை கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தன. இது ஈரானுக்கும் அந்த நாடுகளுக்கும் இடையே சிறிய விரிசலை ஏற்படுத்தியது.

ஈரானை கோபப்படுத்திய விஷயம்…

அமீரகம் இஸ்ரேலுடன் ‘ஆபிரகாம் உடன்படிக்கை’ (Abraham Accords) மூலம் உறவை ஏற்படுத்திக் கொண்டதும், தற்போது இஸ்ரேலின் ‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்துவதும் ஈரானைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஒரு காலத்தில் “வணிக நண்பர்களாக” இருந்த இரு நாடுகள், தற்போது “நேரடி எதிரிகளாக” மாறியுள்ளன. இந்த மோதல் வளைகுடா பிராந்தியத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார அமைப்பையே மாற்றி அமைத்து வருகிறது. இதனிடையே, போர்நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் நிலையிலும், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 380 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கவலைக்குரிய விஷயமாக 22 குழந்தைகள் மற்றும் 39 பெண்கள் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார தரவுகள் தெரிவிக்கின்றன.

பறிக்காது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடியாக இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் மற்றும் வீரர்களைக் குறிவைத்து டிரோன் தாக்குதல்களை நடத்தி வருவதாக ஹெஸ்புல்லா அமைப்பு கூறுகிறது.

அமெரிக்கா – ஈரான் போர் தொடங்கியதிலிருந்து 12 லட்சம் லெபனான் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர். லெபனானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சர்வதேச அமைப்புகள் மற்றும் வல்லரசு நாடுகள், இந்த மோதலை ஒரு பிராந்தியப் போராக மாறாமல் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. போர்நிறுத்தம் என்பது வெறும் காகித அளவிலான ஒப்பந்தமாக இல்லாமல், களத்தில் உயிர்களைக் காக்கும் கவசமாக மாறினால் மட்டுமே லெபனானில் இயல்பு நிலை திரும்ப வாய்ப்புள்ளது.

Read More

Previous Post

Exclusive | “மத்திய அரசு உயர்த்திய வரி… தங்க கடத்தல் நாட்டில் அதிகரிக்கும்…” – ஜெயந்திலால் சலானி

Next Post

விரைவில் விலைகள் மேலும் உயரும் – அமைச்சர் கவலை

Next Post

விரைவில் விலைகள் மேலும் உயரும் – அமைச்சர் கவலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin